சென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம் :தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: சென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம் தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் முட்டி வரை சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று கூறுகிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் சில முக்கிய தகவல்களை பதிவிட்டுள்ளது.  அதில், சென்னையில், 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை சில மணி நேரத்தில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழைநீர் வடியும் வரை இன்னும் சில மணிநேரங்களுக்கு தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான். சென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம்.மேலும் 2017 ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மழைநீரால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. 2017ம் ஆண்டுக்கு பிறகு 24 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய மழை பெய்தது இதுதான் முதல் முறை.இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவிக்கிறார்.

Related Stories: