×

ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்...உலகளவில் கொரோனா பாதிப்பு 4.47 கோடியாக உயர்வு

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சமாக அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 47 லட்சத்து 39 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 81 ஆயிரத்து 186 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 91,18,547
இந்தியா - 79,90,322
பிரேசில் - 54,69,755
ரஷியா - 15,63,976
பிரான்ஸ் - 12,35,132
ஸ்பெயின் - 11,94,681
அர்ஜெண்டினா - 11,30,533
கொலம்பியா - 10,41,935
இங்கிலாந்து - 9,42,275
மெக்சிகோ - 9,01,268

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 72,59,509
அமெரிக்கா - 59,16,281
பிரேசில் - 49,34,548
ரஷியா - 11,71,301
கொலம்பியா - 9,41,874
அர்ஜெண்டினா - 9,31,147
பெரு - 8,16,688
தென் ஆப்ரிக்கா - 6,48,654

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,33,122
பிரேசில் - 1,58,468
இந்தியா - 1,20,010
மெக்சிகோ - 89,814
இங்கிலாந்து - 45,675
இத்தாலி - 37,905
பிரான்ஸ் - 35,785
ஸ்பெயின் - 35,466
பெரு - 34,315
ஈரான் - 33,714

Tags : Corona , World, corona, healed, number, rise
× RELATED கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி