பெண் எஸ்.ஐக்களிடம் சில்மிஷம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: டி.ஜி.பி. நடவடிக்கை

ஈரோடு: ஈரோட்டில் பெண் எஸ்.ஐ.க்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர், சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தின்கீழ் தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் 2 பெண் எஸ்.ஐ.க்களிடம், அந்த பிரிவின் உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் சேகர் என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக ஆபாச வார்த்தைகள் பேசி, சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பெண் எஸ்.ஐ.க்கள், ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் ஒரு தனிக்கமிட்டி விசாரணை நடத்தி, அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதில் இன்ஸ்பெக்டர் சேகர், பெண் எஸ்.ஐ.க்களிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டதும், ஆபாச வார்த்தைகள் பேசியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்.பி. தங்கதுரை, விசாரணை அறிக்கையை தொழில்நுட்ப பிரிவின் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சேகரை, டி.ஜி.பி. சென்னைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். சேகரிடம், டி.ஜி.பி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த முடிவின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>