தர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி தொகுதி எம்பியாக திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் உள்ளார். இவரது இணைய தள முகவரிக்கு பத்மபிரியா என்பவர் பெயரில், ஒரு செய்தி வந்துள்ளது. அதை செந்தில்குமார் எம்பி, படித்து பார்த்த போது, எம்பியை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் வாசகங்கள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில் இணைய வழியில் வந்த செய்தியில், தன்னை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர் யார் என்பது குறித்து விசாரித்து கண்டறிய வேண்டும் என கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>