×

காஷ்மீரில் அதிரடி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்:ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அப்பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு  படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.  இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இவர்களில் ஒருவன் வெளிநாட்டைச் சேர்ந்தவன் என,  முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Tags : militants ,Kashmir , Action 2 militants shot dead in Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க...