சுறாமீன் இறக்கைகள் துபாய்க்கு கடத்த முயற்சி : 2 பேர் கைது

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பிற்பகல் புறப்பட  தயாரானது. அதில் இந்திய அரசின் சிறப்பு அனுமதிபெற்று, துபாய் செல்வதற்காக 86 இந்திய பயணிகள் வந்திருந்தனர். அவர்களை விமான நிலைய  சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அப்போது சென்னையை சேர்ந்த சதகத்துல்லா(52), திருச்சியை சேர்ந்த அப்பாஸ்(25) ஆகிய இருவரும்  ஒன்றாக துபாய் செல்ல வந்திருந்தனர். அவர்கள் பெரிய அட்டைப்பெட்டி  ஒன்றை வைத்திருந்தனர். அதனுள் அப்பளம், வடாம், மசாலா ஆகிய  பொருட்கள் இருப்பதாக கூறினர். ஆனால் அதிகாரிகளுக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தனர். அதனுள் பதப்படுத்தப்பட்ட சுறா மீன்களின் இறக்கைகள் அதிக அளவில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அவைகளை பறிமுதல் செய்து, இருவருடைய பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்தனர். இந்த இறக்கைகள்  மிகவும்  அரியவகையானது. எனவே இதை வெளி நாடுகளுக்கு அனுப்புவதற்கு அரசு தடை செய்துள்ளது. இந்த இறக்கைகள், வெளிநாடுகளில் மருந்துக்காக  பயன்படுத்தப்படுகிறது.  இதன் மொத்த எடை 23.5 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு 17 லட்சம் என தெரிகிறது.

Related Stories: