×

சில்லி பாயின்ட்...

* டெல்லிக்கு எதிரான போட்டியில் பேட் செய்தபோது ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சாஹா காயம் அடைந்த நிலையில், விரைவில் தான்  முழுமையாக குணமடைந்து களமிறங்கத் தயாராகி விட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன்  சாமுவேல்சுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் களமிறங்கும் வெலாசிட்டி அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருப்பது  சற்று சிரமமாகவே இருக்கும். எனினும், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தினாலே இயல்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தலாம் என  சக வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Hyderabad batsman Viruthiman Saha injured while batting in the match against Delhi
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்...