×

திருச்சியில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலையும் உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

திருச்சி: திருச்சியில் வெங்காயத்தின் விலையை தொடர்ந்து உருளை கிழங்கின் விலையும் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. துருக்கி, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படட வெங்காயம் சந்தைக்கு வந்திருந்தாலும், விலை அதிகமாகவே உள்ளது. சென்னை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் கிலோ ரூ.120க்கு மேல் விற்கப்படுகிறது. தற்போது உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விலையும் உயரத்தொடங்கி விட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிக்கு ஆந்திரா, கொடைக்கானல், ஊட்டி, இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது.

கிலோ ரூ.20, 25க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு தற்போது ரூ.40 முதல் 45 வரை விற்கப்படுகிறது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இருகுறித்து உருளைகிழங்கு கமிஷன் மண்டி வியாபாரி வெங்கடாசலம் கூறுகையில், திருச்சி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கொடைக்கானல், இந்தூர் போன்ற பகுதிகளிலிருந்து உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது. மழையால் அங்கு விளைச்சல் குறைந்ததால் உருளை கிழங்கு வரத்தும் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ.20 ரூ.35 வரை தரம் வாரியாக விற்கப்பட்டது. தற்போது மேலும் விலை உயர்ந்து கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்கப்படுகிறது.

ஒரு மாதத்தில் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இனி பண்டிகை காலம் என்பதாலும், மழை மற்றும் வரத்து குறைவாலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார். வெங்காயம் போலவே உருளைக்கிழங்கும் சமையலுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று. இதன்விலையும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags : Trichy ,Housewives , Potato prices rise following onion in Trichy: Housewives shocked
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்