கொரோனா தொற்று பாதிப்பால் சீன டாக்டருக்கு முகம் கறுத்தது

பீஜிங்: கொரோனா தொற்று பாதிப்பால் சீன டாக்டர் ஒருவருக்கு முகம் கறுத்து போனதாக தகவல்கள் வெளியானது. மற்றொரு மருத்துவர் முகம் கறுத்த நிலையில் தொற்று பாதிப்பால் இறந்துவிட்டார். சீனாவின் வூஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வருகிறது. வூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் யி ஃபென் மற்றும் மருத்துவர் ஹு வைஃபெங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் இருவரும் வூஹானின் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

இருவரும் ஜனவரி கடைசி வாரத்தில் வூஹான் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சைக்கு பின்னர், இருவரும் தங்களது கண்களைத் திறந்து பார்த்த போது, அவர்கள் ​​தங்களை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவர்களது முகம், தோல் ஆகியன வழக்கத்திற்கு மாறாக கறுப்பு நிறமாக மாறி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரில் ஒருவரான ஹு வைஃபெங் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் பலியானார். மற்றொருவரான யி ஃபென் தற்ேபாது குணமடைந்த நிலையில் ஓய்வில் உள்ளார். அவரது கறுப்பு நிற தோலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி உள்ளதாக ‘டெய்லி மெயில்’ என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Stories:

>