×

சென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: சென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னை மாவட்டம் பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் கட்சி பணியை விரைவு படுத்தும் வகையிலும் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை (தெற்கு), தென் சென்னை (வடக்கு), தென் சென்னை ( தெற்கு) ஆகிய மாவட்டங்கள்  ஆறாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையை பொறுத்தவரை 5 மாவட்டங்களாக அதிமுக செயல்படுகிறது.

அந்த அடிப்படையில் தென் சென்னை வடக்கு,  தென் சென்னை தெற்கு மற்றும் வட சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் மேலும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் ஆறு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டு  தற்போது மாவட்ட செயலாளர்களை அதிமுக நியமித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்;

வடசென்னை தெற்கு (கிழக்கு)- (மாவட்ட கழக செயலாளர்) திரு. D. ஜெயக்குமார்  
1. ராயபுரம்(17)
2. திரு.வி.க.நகர் (தனி) (15)

வடசென்னை தெற்கு(மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.நா.பாலகங்கா
1. எழும்பூர் (தனி) (16)
2. துறைமுகம்(18)

தென் சென்னை வடக்கு(கிழக்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.ஆதிராஜாராம்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி(19)
2. ஆயிரம் விளக்கு(20)

தென் சென்னை வடக்கு(மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.தி-நகர் B. சத்தியா, MLA
1. தியாகராய நகர்(24)
2. அண்ணாநகர்(21)

தென் சென்னை தெற்கு (கிழக்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.M.K.அசோக் Ex.MLA
1. மைலாப்பூர்(25)
2. வேளச்சேரி(26)

தென் சென்னை தெற்கு (மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.வருகை V.N. ரவி, MLA
விருகம்பாக்கம்(22)
சைதாப்பேட்டை(23)

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : AIADMK ,districts ,Chennai ,OBS , AIADMK divides new districts in Chennai and appoints office bearers: OBS, EPS joint report
× RELATED அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்