×

தெலுங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த நபர்....!! தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரபிகா என்பவரை கொலை செய்ததை மறைக்க 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சஞ்சய் குமார் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கீசுகொண்டா மண்டலத்தின் கோரெகுந்தா கிராமத்தில் மே 20 மற்றும் 21 தேதிகளில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேர் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி சஞ்சய் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார்.  

இவர் முன்னதாக ரபிகா என்ற பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். ரபிகாவின் 16 வயது மகளை சஞ்சய் காதலித்து வந்ததாகவும், அதற்கு ரபிகா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ரபிகா கொலை தொடர்பாக தனியே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில், அந்த கொலையை மறைக்க மேலும் 9 பேரை சஞ்சய் கொலை செய்து கிணற்றில் வீசியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில், மாவட்ட நீதிபதி கே.ஜெய குமார், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Tags : murder ,Telangana ,death ,court , 9 murdered person to cover up a murder in Telangana .... !! The court sentenced him to death
× RELATED ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி