×

பொன்னமராவதி பகுதியில் மக்கள் சுமைகளை தாங்க அமைத்த சுமை தாங்கி கல்

பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதிகளில் பொதுமக்களின் சுமைகளை தாங்குவதற்காக அமைக்கப்பட்டுள் சுமை தாங்கிகள் இன்று வெறும் காட்சிப்பொருளாக காணப்படுகிறது. கிராமங்களில் இருந்து பொன்னமராவதி நகருக்கு காய்கள் மற்றும் பொருட்கள் முன்பெல்லாம் கால்நடையாக சுமந்து வந்துள்ளனர். நீண்ட தூரம் சுமைகளை கொண்டு வருபவர்கள் தங்களது சுமைகளை சற்று நேரம் இறக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் போது இதனை இறக்கி வைக்க இன்னொரு நபர் தேவைப்படும் ஆனால் அப்போது அந்த வழியில் ஆள் கிடைக்கமாட்டார்கள்.

அப்போது சாலை ஓரங்களில் நிறுவப்பட்டுள்ள சுமை தாங்கி கல்லில் தங்களது சுமைகளை இறக்கி வைத்து சிறிது நேரம் நின்று ஓய்வு எடுத்துச்சென்றால் அவர்களின் சுமை குறைந்து விடும். இவ்வாறு ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி,நகரப்பட்டி, உலகம்பட்டடி, வேகுப்பட்டி, பூலாங்குறிச்சி, வேந்தன்பட்டி, வார்பட்டு, திருக்களம்பூர் ,குழிபிறை,அரசமலை உள்ளிட்ட கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்களை கால்நடையாகவே தலையில் சுமந்து சென்றுள்ளனர்.

அப்போது இந்த சுமை தாங்கி பெரும் ஆறுதலாக இருந்தது. தலைமையில் காய்கறி கூடைகள் சுமந்து எங்கிருந்து பார்த்தாலும் விவசாயிகள் பொன்னமராவதி சந்தைக்கு வருவார்கள். ஆனால் இப்போது யாருமே கால்நடைகளாக செல்வதில்லை என பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடையில் இருந்து சைக்கிளில் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்துக்கும் வாகனங்கள் வந்துவிட்டது. இதனால் இப்போது சாலைஒரங்களில் சுமைதாங்கி பயன்பாடின்றி முட்புதர்கள் மண்டி காட்சிப்பொருளாக நிற்கின்றது. ஒரு காலத்தில் சுமைகள் தாங்கி கல் இன்றி சுமைகள் இன்றி யாரும் கண்டுகொள்ளாத வெறும் கல்லாக நிற்கின்றது.

Tags : area ,Ponnamaravathi , Ponnamaravathi, load-bearing stone
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...