×

மணல் குவாரி அமைக்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கறம்பக்குடி: மணல் குவாரி அமைக்க கோரி கறம்பக்குடி பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடி பகுதியை சேர்ந்த திருமனஞ்சேரி சவேரியார்பட்டினம் கற்ககுருச்சி, குரும்பிவயல், பட்டத்திக்காடு, முல்லங்குறிச்சி, கோட்டைக்காடு சூரக்காடு, மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்ட மணல் அள்ளும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜேசுராஜ் தலைமையில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செங்கோடன் மற்றும் ஆரோக்கியராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன் மாட்டு வண்டிகளுடன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கபடும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கறம்பக் குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தையில் நாளை மறுநாள் கனிமம் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் திருச்சி அலு வலர் வரவுள்ளார் என்றும் உங்களுடைய கோரிக்கை களை நிறைவேற்ற அனை த்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்றும் அதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றும் எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் முற்றுகை போராட்டங்களை விளக்கி கொண்டனர். இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது மாட்டு வண்டிகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது


Tags : taluka office ,sand quarry , Cattle cart, workers
× RELATED கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது