×

அத்தியூர் அருகே சாலையில் மர்ம நபர்கள் மரங்களை வெட்டி போட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை-அகரம்சிகூர் சாலையில் அத்தியூர் அருகே அதிகாலை 4 மரங்களை மர்மநபர்கள் வெட்டிப்போட்டதால் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்து றையிலிருந்து.அகரம்சிகூர் வரையிலான சாலையில் அத்தியூர் அருகே நேற்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் 3 வேப்பமரங்களையும் ஒரு பனைமரத்தையும் வெட்டி சாலையின் குறுக்கே போட்டுள்ளனர். இதனால் திருமாந்துறை அகரம்சிகூர் இடையிலான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து மங்கலமேடு இன்ஸ்பெக்டர் கலா உள்ளிட்ட போலீசார் நேரில் அங்கு சென்று வரு வாய்த் துறையினர் உதவியுடன் சாலையின் குறுக்கே வெட்டப்பட்டு கிடந்த 4மரங் களையும் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

தகவலறிந்து குன்னம் தாசில் தார் சின்னதுரை மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அங்குசென்று விசாரணை நடத்தினர். மங்கலமேடு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விஷமச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அத்தியூர், ஒகளூர் அகரம்சிகூர் உள்ளிட்ட சில கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் திருமாந் துறை- அகரம்சிகூர் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : persons ,road ,Attiyur , Transport, Perambalur
× RELATED புயல் எச்சரிக்கை எதிரொலி...