விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக கூறி தொடர்ந்து மிரட்டல்கள், ஆபாசமான வார்த்தைகளில் அச்சுறுத்தல்கள் வருகின்றன : சீனு ராமசாமி பேட்டி!!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான அவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஜய்சேதுபதியை ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இந்த கூட்டணி 3 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியுள்ளது. இந்நிலையில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீரென தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் தனக்கு உதவ வேண்டும் என்றும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீனு ராமசாமி, வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். கதைப் பிடித்ததால் அப்படத்தில் நடிக்க முன்வந்ததாகவும் அதன் பிறகே பின்னணி தெரிந்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார

நன்றி, வணக்கம்’ என கூறியதன் அர்த்தம் என்ன என விஜய்சேதுபதியிடம் கேட்டேன். விஜய்சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன். விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது.விரைவில் காவல்துறையில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்க உள்ளேன். எனத் தெரிவித்தார். சமீபத்தில், 800 பட விவகாரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை சீனு ராமசாமி கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: