×

நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்: என்.சி.பி.அதிகாரிகளின் சோதனையில் அம்பலம் !

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கிரிஷ்மா பிரகாஷ் வீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரம், பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணத்தையடுத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளின் பெயர்களும் இதில் அவ்வப்போது சிக்கி வந்தது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான்,  ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத், தீபிகா படுகோனே மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, தற்போது நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கிரிஷ்மா பிரகாஷ் வீட்டில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள கிரிஷ்மா பிரகாஷ்யின் வீட்டில் என்.சி.பி.அதிகாரிகளின் சோதனையில் போதை பொருள் பதுக்கியது அம்பலமாகியுள்ளது.


Tags : Deepika Padukone ,manager ,home ,raid ,NCP , Actress Deepika Padukone, Manager, Drugs, Seizure
× RELATED ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் 108 சவரன் மோசடி: தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு வலை