×

தீபாவளி உள்ளிட்ட விஷேச தினங்கள் வரும் வேளையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 38,184க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 38,184க்கு விற்பனை செய்யப்படுகிறது . தீபாவளி உள்ளிட்ட விஷேச தினங்கள் வரும் வேளையில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 22ம் தேதி ஒரு சவரன் 38,000, 23ம் தேதி 37,792க்கும், 24ம் தேதி 37776க்கும் விற்கப்பட்டது. 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், அன்றைய தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையே விற்கப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. ஒரு கிராம் தங்கம் 4,723க்கும், சவரன் 37,784க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 64 அதிகரித்து ஒரு கிராம் 4787க்கும், சவரனுக்கு 512 அதிகரித்து ஒரு சவரன் 38,296க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் பவுன் மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது. மாலையில் தங்கம் விலை காலையில் விற்பனையான விலையை விட சற்று குறைந்தது.

அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 33 அதிகரித்து ஒரு கிராம் 4,756க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் 38,048க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 38,184க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ17 உயர்ந்து ரூ.4,774க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66,40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் விஷேச தினங்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வர உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வு நகை வாங்க நினைப்போரை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags : Gold, pound, sale
× RELATED கடந்த 3 நாட்களாக குறையும் தங்கத்தின்...