உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு!!

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 10.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 90,34,232, உயிரிழப்பு - 2,32,014, குணமடைந்தோர் - 58,72,959

இந்தியா       -    பாதிப்பு - 79,88,853, உயிரிழப்பு - 1,20,054, குணமடைந்தோர் - 72,57,194

பிரேசில்       -    பாதிப்பு - 54,40,903, உயிரிழப்பு - 1,57,981, குணமடைந்தோர் -  49,04,046

ரஷியா        -    பாதிப்பு - 15,47,774, உயிரிழப்பு -   26,589, குணமடைந்தோர்  - 11,58,940

பிரான்ஸ்     -     பாதிப்பு -  11,98,695, உயிரிழப்பு -   35,541, குணமடைந்தோர்  - 1,12,716

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -11,74,916

அர்ஜென்டினா - 11,16,609

கொலம்பியா - 10,33,218

இங்கிலாந்து -  9,17,575

மெக்சிகோ - 8,95,326

பெரு - 8,92,497

தென்னாப்பிரிக்கா - 7,17,851

ஈரான்- 5,81,824

இத்தாலி - 5,64,778

சிலி- 5,04,525

Related Stories: