போலீஸ் துப்பாக்கிச்சூடு கருப்பின வாலிபர் பலி: வன்முறை வெடித்ததில் 30 போலீசார் காயம்

பிளடெல்பியா: அமெரிக்காவின் பிளடெல்பியாவில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கருப்பின வாலிபர் பலியானதால், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்காவில் கருப்பின வாலிபரான ஜார்ஜ் பிளாட்டை சில மாதங்களுக்கு முன் போலீசார் கொன்றதால், போராட்டம் வெடித்தது. இது, உலகளாவிய போராட்டமாக மாறியதால் அதிபர் டிரம்ப்புக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அதிபர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு கருப்பின வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.  அமெரிக்காவின் பிளடெல்பியாவில் கத்தியுடன் சுற்றிய கருப்பின வாலிபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற காட்சிகள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர் பெயர் வால்டர் வாலஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது.  இதில், வன்முறை வெடித்தது. போலீசாரின் கார்கள் எரிக்கப்பட்டன. மேலும், கல்வீச்சி்ல் 30 போலீசார், காயமடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Related Stories:

>