அதிகாரம், அகந்தையால் மக்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:  ‘தனது அதிகாரம், அகந்தையால் பீகார் அரசானது அதன் ஜனநாயக பாதையில்  இருந்து விலகி விட்டது,’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று  நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 4 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ செய்தியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள விவரம் வருமாறு: ஆட்சி  அதிகாரம் மற்றும் அகந்தையின் காரணமாக தற்போதைய பீகார் அரசானது அதன்  ஜனநாயக பாதையில் இருந்து விலகிவிட்டது. அவர்கள் சொல்வதும், செய்வதும் எதுவும் சரியாக இல்லை. தொழிலாளர்கள் உதவியின்றி இருக்கின்றனர். விவசாயிகள் வேதனையில்  இருக்கிறார்கள்.

இளைஞர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தின்  பலவீனமான நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை இருள்சூ ழ்ந்துள்ளது. மண்ணின்  மகன்கள் கடுமையான வேதனையில் இருக்கின்றனர். தலீத் மற்றும் சமூகத்தில்  பின்தங்கிய வகுப்பினரும் அவலநிலையில் விடப்பட்டுள்ளனர். பீகார் மக்களின்  குரலானது காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணியுடன் உள்ளது. இது தான் பீகாருக்கான  அழைப்பாகும். பயம் மற்றும் குற்றத்தின் அடிப்படையில் கொள்கை மற்றும்  அரசாங்கத்தை அமைக்க முடியாது. பீகார் இந்தியாவின் கண்ணாடி, நம்பிக்கை.  பீகார் என்பது பெருமை மற்றும் இந்தியாவின் பெருமையாகும்.

இளைஞர்கள்,  விவசாயிகள், தொழிலாளர்கள், சகோதர, சகோதரிகள் பீகாரில மட்டுமல்ல இந்தியா  முழுவதிலும், உலகம் முழுவதிலும் உள்ளனர். ஆனால் இன்று அதே பீகாரானது  கிராமங்கள், நகரங்கள், பண்ணைகள் அதன் சிறப்புக்காகவும், புதிய  மாற்றங்களுக்காகவும் தயாராக இருக்கிறது.

Related Stories:

>