களுக்கு புதிய ஊதியத்தை பரிந்துரை செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு 9.11.2015 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நவம்பர் மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு தற்போது பெற்று வரும் ஊதிய விகிதங்களை பரிசீலித்து புதிய ஊதிய விகிதங்களை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக அரசு ஒரு குழுவை அமைத்து உத்தரவிடுகிறது.

அதன்படி ஆர்.ஜி.சக்திசரவணன் (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு மேலாண்மை இயக்குனர்) தலைமையில் த.பாலசுப்பிரமணியன் (நிதித்துறை இணை செயலாளர்), பெ.சுபாஷினி (கூட்டுறவு சங்க இணை பதிவாளர்), ஆர்.கே.சந்திரசேகரன் (கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர்), தே.ஜவகர் பிரசாத் ராஜ் (இணைபதிவாளர்), ரவிக்குமார் (திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர்), சி.பார்த்திபன் (இணைபதிவாளர், ஈரோடு), டி.சிதம்பரம் (நாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காஞ்சிபுரம்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் ஊதிய உயர்வு தொடர்பான நியாய விலை கடை பணியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்களின் கோரிக்கைகளை பெற்று பரிசீலித்து புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் அகவிலைப்படி, மருத்துவப்படி உள்ளிட்ட அனைத்து படிகள் வழங்குகள், தேர்வு நிலை, தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கு குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்கும்.

Related Stories: