கொரோனா விதிகளை மீறியதாக 3 நாளில் ரூ.9.77 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மாஸ்க் அணிவது, கை கழுவுவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. சென்னையில் இதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த வாரம் முழுவதும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 21ம் தேதி ரூ4.20 லட்சமும், 22ம் தேதி ரூ.3.19 லட்சமும், 23ம் தேதி ரூ..37 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.9.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.2.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>