சுற்றுலா தங்கும் விடுதி உரிமையாளர்கள் வலைதளத்தில் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்:கலெக்டர் வேண்டுகோள்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு: சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு புதிதாக தொடங்கியுள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த தரவு தளம் மூலம் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் விடுதி விவரங்களை WWW.NIDHI.NIC.IN, WWW.SAATHI.QCIN.ORG  ஆகிய வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும், “SAATHI”  என்கிற இணையதளத்தில் பதிவு செய்யும் விடுதி உரிமையாளர்களுக்கு சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு சுய சான்றிதழ் வழங்கவுள்ளது.

இந்த நற்சான்று மூலம், தங்களின் வணிகத்தை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும். மேலும், சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதி பணியாளர்களை பங்கு பெறச்செய்து பயன்பெறலாம்.  அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை tochn2@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்கள், இதில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண். 044-25333358 மின்னஞ்சல் tochn2@gmail.com தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: