×

உதவி ஆய்வாளர் திடீர் மரணம்

சென்னை: ஆவடி 17வது தெருவை சேர்ந்தவர் வைகைமாறன் (56). அமைந்தகரை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு, பணிமுடிந்து வீடு திரும்பிய அவர், திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் ரத்தம் உறைந்து இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரியில் உள்ள சித்த வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து, கடந்த 24ம் தேதி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.


Tags : death ,Assistant Investigator , Sudden death of Assistant Investigator
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு