திருச்சி ஜூவல்லரியில் 29 கிலோ நகை திருடிய கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு மருத்துவமனையில் சாவு

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை கும்பல் தலைவன் முருகன் நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரு மருத்துவமனையில் திடீரென இறந்தான். திருச்சி லலிதா ஜூவல்லரியின் சுவரை துளையிட்டு கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி 13 கோடி மதிப்பிலான 29 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட து. இது தொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் முருகன்,  திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, அவரது மகன் சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் முருகன் மீது தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் 100 வழக்குகள் உள்ளது. இதனால், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

முருகனை பெங்களூரு போலீசார் கடந்தாண்டு அக்டோபர் 12ம் தேதி பெரம்பலூருக்கு அழைத்து வந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்து ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், முருகனுக்கு உயிர்கொல்லி நோய் இருப்பதால் அதற்கான சிகிச்சையை பெங்களூரு மருத்துவமனையில் எடுத்து வந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையில் முருகன் இறந்தார்.  உறவினர்கள் ஏற்கனவே முருகனை  புறக்கணித்ததால் அவரது சடலத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து அவரது உடலை தகனம் செய்யும்  முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: