ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

அண்ணாநகர்: வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோயில் 2வது தெருவை ஆக்கிரமித்து 32 குடும்பங்கள் கடந்த 15 வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக, இங்குள்ள வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து, இவர்களுக்கு அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டல பொறுப்பு அதிகாரி வைத்தியலிங்கம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த தெருவில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தி, அம்பத்தூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>