மேம்பால பணி காரணமாக கோயம்பேட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: கோயம்பேடு 100 அடி சாலையில் மேம்பாலம் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் காளியம்மன் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினரால் மேம்பால கட்டுமான பணி நடைபெற உள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 100 அடி சாலையில் திருமங்கலத்திலிருந்து காளியம்மன் சாலை செல்ல விரும்பும் இலகுரக வாகனங்கள் 100 அடி சாலையில் 200 மீட்டர் தூரம் தொலைவில் அடையார் ஆனந்தபவன் எதிரில் திரும்பி காளியம்மன் கோயில் வழியாக செல்லாம்.

* 100 அடி சாலையில் திருமங்கலத்திலிருந்து காளியம்மன் கோயில் செல்ல விரும்பும் வாகனங்கள் 100 அடி சாலையில் 500 மீட்டர் தொலைவில் மாநகர பேருந்து நிலையம் எதிரே திரும்பி காளியம்மன் கோயில் தெருவிற்கு செல்லாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>