அணைகள் புனரமைக்கும் கெடு டிச.31க்குள் முடிகிறது பருவமழையால் 61 கோடியை பயன்படுத்துவதில் சிக்கல்: காலஅவகாசம் கேட்டு மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம்

சென்னை:  தமிழகத்தில் 2011 முதல் 745 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் 111 அணைகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள நிர்வாக அளவில் ஒப்புதல் பெறப்பட்டன. ஆனால், இத்திட்ட அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் காரணமாக, 2014 முதல் தான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த திட்டத்தை 7 ஆண்டு களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அணைகள் புனரமைப்பு பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த திட்டத்தை குறிப்பிட்ட கால நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 2 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டன. மேலும், 745 கோடியாக இருந்த திட்டமதிப்பீடு ₹803 கோடியாக அதிகரித்தது.

இந்த நிலையில், உலக வங்கி வழங்கிய கால அவகாசம் முடிய 2 மாதமே உள்ளது. ஆனால், பொதுப்பணித்துறையில் 69 அணைகளில் 66 அணைகள் மட்டுமே புனரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. 2 அணைகளில் புனரமைப்பு பணி நடக்கிறது. அதே போன்று, மின்வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள 20 அணைகளில் மட்டுமே பணி முடிந்துள்ளது. ஒரு அணையின் பணி கைவிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது வரை பொதுப்பணித்துறை சார்பில் 515 கோடியும், மின்வாரியம் சார்பில் ₹216 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள் ளது. நடப்பாண்டில் பொதுப் பணித்துறையில் 56.9 கோடியில் 8.8 கோடியும், மின்வாரியத்தில் 21.1 கோடியில் 7.8 கோடியுமே செலவிடப்பட்டுள்ளது.

இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 61.3 கோடி செலவிட வேண்டியுள்ளது. தற் ேபாதைய நிலையில் பருவ மழை பெய்து வருவதாலும், அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதாலும், வரும் டிசம்பர்31ம் தேதிக்குள் புனரமைப்பு பணிகளை முடிக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், உலக வங்கியின் கெடு முடிந்தால், 61 கோடி நிதி தமிழகத்துக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.

Related Stories: