ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

பள்ளிப்பட்டு: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சஹஸ்ர பத்மநாபபுரம் ஊராட்சியில் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம்  மதிப்பீட்டில் தார் சாலை, தாமனேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி பணிகளை பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஜெ.பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தம்மாள் ஆனந்தன், கல்விக்கரசி சேகர், கார்த்திகேயன், திருநாவுக்கரசு, ஜமுனா குமாரசாமி, செல்வி சந்தோஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி ஒப்பந்தகாரர் தாமனேரி கிரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தென்னரசு, ராணி காணிக்ராஜ், விஜயன், அதிமுக நிர்வாகிகள் பாரி, பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி வானிவிலாசபுரம், காக்களூர் ஆகிய பகுதிகளில் வருவாய்த் துறை சார்பில்  பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் கலந்துக்கொண்டு 80 குடும்பங்களை சேர்ந்த ஏழை, எளியோருக்கு  தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இதில் பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: