×

10, பிளஸ்2 துணை தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட்ட துணைத்தேர்வுகளின் ேதர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் இன்று காலை 11 மணி முதல், பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோர் இன்று மதியம் 2 மணி முதல், பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதியோர் நாளை காலை 11 மணி முதல் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மறு கூட்டல்: மேற்கண்ட துணைத் தேர்வுக்கான மறுகூட்டல் செய்ய விரும்புவோர் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நவம்பர் 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் கட்டணம் பாடம் ஒவ்வொன்றுக்கும் 205 செலுத்த வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடைத்தாள் நகல் பெற, பாடம் ஒவ்வொன்றுக்கும் 275 கட்டணம் செலுத்த வேண்டும். இதையடுத்து, மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305, மற்ற பாடங்களுக்கு தலா 205 செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.



Tags : 10, Plus 2 Sub-Exam Results Release
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...