×

குட்கா பதுக்கிய இருவர் கைது

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான சிலர் நின்று கொண்டிருந்தனர். பின்னர், போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அங்கிருந்த 3 கிலோ எடையுள்ள குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார்(30), முருகன்(43) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Two arrested for hiding Gutka
× RELATED கடைகளில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்த இரு வியாபாரிகள் கைது