பட்டாசாக வெடித்த வார்னர், சஹா...!! டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

துபாய்: ஐபிஎல் ஆட்டங்களில் இன்று ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஹைதராபாத் அணியில் வில்லியம்ஸன், சஹா, நதீம் சேர்க்கப்பட்டு, பெயர்ஸ்டோ கார்க், கலீல் நீக்கப்பட்டுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா, வார்னர் களமிறங்கினார்கள். எதிர்பார்த்ததை விட அட்டகாசமான தொடக்கத்தினை இந்த இணை அளித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிகபட்சமாக விக்கெட்டே விழாமல் 77 ரன்களை குவித்தனர்.

வார்னர் 34 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 66 ரன்களில் ஆட்டமிழந்தார், சஹா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 2 சிக்ஸருடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரின் நம்பர் ஒன் பவுலரான ரபாடவை வார்னர் வெளுத்து வாங்கினார். பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்துகளில் 44 ரன்கள் விளாச ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Related Stories: