நட்ஸ் கத்லீ

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை ஒன்றன் பின் ஒன்றாக மிதமான சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும். இத்துடன் வால்நட்ஸ் சேர்த்து கலந்து இறக்கவும். சூடு ஆறியதும் மிக்சி அல்லது ப்ளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதே தவாவில் சர்க்கரை, 100 மி.லி. தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும். சிறிது கொதித்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து, அரைத்த நட்ஸ் பவுடரை ஒன்றாக கலந்து கட்டியில்லாமல், கைவிடாமல் கிளறவும்.

தவாவில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். கையில் நெய் தடவி கொண்டு நட்ஸ் கலவையை பிசையவும். அதிகமாக இறுக்கமாக பிசைய வேண்டாம். ஒரு தட்டின் பின்புறம் நெய் தடவி கொண்டு, அதன் மீது கலவையை போட்டு, சப்பாத்தி தேய்க்கும் உருட்டுக்கட்டையால் 5 மி.மி. தடிமன் அளவிற்கு தேய்க்கவும். டைமண்ட் வடிவம் அல்லது விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.

குறிப்பு: நட்ஸ் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பாலைச் சேர்த்துப் பிசையவும். மிகவும் சாஃப்டாக இருந்தால் சிறிது பால் பவுடரைச் சேர்த்து பிசையவும்.