×

10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!! 11-ம் வகுப்பு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்.29-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ,முடிவுகள் வெளியாகும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு நவ. 3,4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். 10,+2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் தமிழகத்தில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்து தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை மதிப்பிட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

இதனிடையே 12,11,மற்றும் 10 ஆம் வகுப்பில் தோல்வியடந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் 12, மற்றும் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுதியவர்கள், தங்கள் முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியாகும். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 29-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


Tags : 10, + 2 by-election results to be released tomorrow .. !! Class 11 results released Oct. 29; Selection Department Notice
× RELATED நவம்பர் 18-ம் தேதி 8ம் வகுப்பு...