×

முதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு

பாட்னா: பீகாரில் அம்மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று முசாபர்பூரில் நடந்த பேரணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அப்பகுதியில் இருந்து ஒருவர் திடீரென ஹெலிகாப்டர் நோக்கி தனது செருப்பை வீசினார்.

மேலும், நிதிஷ்குமாருக்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார், நிதிஷ்குமாரை மாற்று வழியாக அழைத்து சென்றனர். இவ்விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்வரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Nitish Kumar ,Bihar , Shoes thrown at Chief Minister Nitish Kumar's helicopter: Tensions in Bihar
× RELATED கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின்...