×

சீனா மட்டுமின்றி எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி.!!!

டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை  மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. அதன்படி,  இன்று மூன்றாவது ஆண்டாக டெல்லியில் உள்ள ஐத்ராபாத் இல்லத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்க வெளியுறவு  துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொடர்ந்து இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவத்தொடர்பை பலப்படுத்த ஆலோசித்தோம். கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கல்வான் பள்ளதாக்கு சம்பவம் மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்காக கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களால் உயிரிழந்த 20 வீரர்கள் உள்பட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று நாங்கள் அஞ்சலி செலுத்தினோம். நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். சீனாவின் கம்யூனிச அரசாங்கம் மட்டுமல்ல அனைத்து வகையிலான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வரும் இரு நாடுகளும் சைபர் தாக்குதல் விவகாரம், இந்திய பெருங்கடலில் கடற்படை போர் பயிற்சியில் இணைந்து செயல்பட ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தையில் சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரசை வீழ்த்த ஒருங்கிணைந்து செயல்படுவது முதல் பிராந்திய நிலைத்தன்மை, அமைதியை நிலைநாட்டல், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சீன கம்யூனிச அரசு வரை விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா விருப்பம் கொள்வதாக தெரிவித்தார்.

ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும், சுதந்திரத்திற்கும் சீனா அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா எப்போதும் தோளோடு தோள் நிற்கும். எங்களுடைய பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில், அனைவருக்கும் இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிப்பதில் தோளோடு தோள் நிற்கிறோம். குறிப்பாக சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஸ்திரமின்மை நடவடிக்கைகளின் என்றார்.  



Tags : China ,US ,India ,Secretary of State , US will stand by India to face any threats not only from China: US Secretary of State Interview. !!!
× RELATED சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி