புதிய தளர்வுகள் இல்லாமல் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு...!! சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி; மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தின் 9ஆம் கட்டம் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளூடன் பொது முடக்கத்தை வருகிற நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அதன்படி, கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் நவம்வர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை வெளியிட்ட கட்டுப்பாடுகள், நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அன்லாக் 6.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தளர்வுகளான, மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து, பயிற்சிகளுக்கான நீச்சல் குளங்களை திறந்து கொள்ளலாம், 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி உள்ளிடவைகள் கட்டுப்பாடுகளுடன் தொடரும் என அறிவித்துள்ள மத்திய அரசு, நிலைமைக்கு தகுந்தவாறு கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>