காஞ்சி அருகே கோட்டை நோக்கி விவசாயிகள் நடைபயணம்: முதல்வர் அடிக்கல் நாட்டிய இடத்தில் தடுப்பணை கட்டவில்லை என புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் இருந்து சென்னை கோட்டையை முற்றுகையிட நடைபயணமாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர். உள்ளாவூர் பகுதியில் பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 42 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ஆனால் உள்ளாவூரில் தடுப்பணை காட்டாமல் திருமுக்கூடலில் தடுப்பணை கட்டப்பட்டிருப்பது விவசாயிகளில் குற்றச்சாட்டாகும். இதனை கண்டிக்கும் வகையில் கோட்டையை முற்றுகையிட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். திருமுக்கூடலில் தடுப்பணை காட்டுவதால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே முதல்வர் அடிக்கல் நாட்டிய இடத்திலேயே பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 

Related Stories: