நாடு முழுவதும் 2019ம் ஆண்டு சாலை விபத்தில் 1,51,113 பேர் பலி: மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2019ம் ஆண்டு உலக அளவில் நடந்த சாலை விபத்துக்களில் 13.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 11 சதவீத விபத்துக்கள் இந்தியாவில் நடந்துள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடந்த சாலை விபத்துக்களில் 1,51,113 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 63,093 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 37,461 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் 4,67,044 சாலை விபத்துக்கள் நடந்த நிலையில் 1,51,417 நபர்கள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் பட்சத்தில் 0.20 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

கடந்தாண்டை பொருத்தவரை உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 22,655 நபர்கள் சாலை விபத்துக்களில் தங்களது வாழ்கையை இழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளது.  ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூரு, கான்பூர் உள்ளிட்ட இடங்களிலும் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சாலைவிதிகளை மீறி நடந்துள்ள இந்த விபத்துக்களில் 67 சதவீதமானது தவறான பாதையில் வாகனத்தை இயக்கிய காரணத்தினால் நிகழ்ந்தவை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>