×

இந்த ஆண்டு விம்பிள்டன் கிடையாது

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதன்மையானது என கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என ஆல் இங்கிலாந்து டென்னினிஸ் கிளப் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. உலகை உலுக்கிய கொரோனா காரணமாக ஒலிம்பிக், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை உட்பட சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் யுஎஸ் ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டன.

இதே போல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளும் இந்த ஆண்டு நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ‘விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியமே முக்கியம். நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் நடைபெறாது. அறிவிக்கப்பட்ட தேதியில் (ஜூன் 28, 2021) வழக்கம் போல் அடுத்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டிகள் நடைபெறும். பார்வையாளர்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை அப்போது உள்ள நிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்வோம்’என்று ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் உறுதியாக அறிவித்து விட்டது.

Tags : Wimbledon , There will be no Wimbledon this year
× RELATED விம்பிள்டன் இறுதிப்போட்டியில்...