×

2 + 2 பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.!!!

டெல்லி: இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை  மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. அதன்படி,  இன்று மூன்றாவது ஆண்டாக டெல்லியில் உள்ள ஐத்ராபாத் இல்லத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்க வெளியுறவு  துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில்  இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரைப்படங்கள், செயற்கைக்கோள் தரவுகள் உட்பட முக்கியமானவற்றை இருநாடுகளும் பரிமாறி கொள்ளும். இதன் மூலம் இந்தியா அமெரிக்கா  செயற்கைக்கோள் மூலமாகவும், அமெரிக்க தொழில்நுட்பம் மூலமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்புகள் எப்படி இருக்கிறது. எதிரிகள் எந்த இடத்தில்  இருந்து எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் என்பதை துல்லியமாக கவனிந்து தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிற்கு கிழக்கு எல்லை அல்லது மேற்கு எல்லைகளில்  நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் இருந்தால், அதனை கண்டறிந்து துல்லியமாக தாக்குதல் நடத்தலாம்.

தற்போதைய வேலையில், இந்தியா பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து,  அமெரிக்க அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.  



Tags : Negotiations ,India , Agreement on 2 + 2 Negotiations: India-US Military Exchange Agreement signed !!!
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...