நவ.15 கடைசி நாள்: பல் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.!!!

டெல்லி: முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில்  மாணவர்கள் சேர நீட் என்னும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த கல்வி ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு கொரோனா காரணமாக செப்டம்பர்  13ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், பல் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும். நீட் தேர்வுக்கு நவம்பர் 15-ம் தேதி வரை https://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு helpdesknbeexam@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்வு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>