தி.நகரில் நகைத்திருட்டை தடுக்க போலீசார் புதிய வியூகம்: கழுத்தில் அணியும் வகையில், நகை பாதுகாப்பு துணி இலவசமாக விநியோகம்.!!!

சென்னை: பண்டிகை காலத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் திருட்டு சம்பவங்களை குறைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் புத்தாடைகள், நகைகள், பட்டாசுகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் அதிகளவு குவிய தொடங்கியுள்ளனர். தீபாவளிக்கு நாட்கள் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இதனை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட அதிகம் முயற்சி செய்வார்கள்.

இதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருடர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதாக சென்னை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனால், தீபாவளி ஷாப்பிங்கிற்காக சென்னை தியாகராய நகருக்கு வரும் பொதுமக்கள் நகைகள், பணங்களை திருடர்களிடம் பறிகொடுக்காமல் இருக்க காவல்துறை சிறப்பு வியூகம் வகுத்துள்ளது. திருடர்களை கண்டுபிடிக்க காவல்துறை பயன்படுத்தும் செயலி தொழில்நுட்பத்தை  தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

முக்கிய பகுதிகளில் மக்கள் நுழைய ஒரு பாதையும், வெளியே செல்ல ஒரு பாதையும் அமைத்து கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், செயின் பறிப்புகளை தடுப்பதற்காக பெண்கள் கழுத்தில் அணியும் வகையில், நகை பாதுகாப்பு துணியை காவல்துறை இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. மேலும், சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள 8 காவல்துறையினர் ரொந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வார விடுமுறை தீபாவளிக்கு முந்தைய நாட்களில் 500 காவல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்வதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: