×

முதன்முறையாக 40,000-திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு: கொரோனா பலி எண்ணிக்கையும் சரிவு; குணமடைந்தோர் விகிதம் 90%.-ஐ தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 79 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 36,469 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  79,46,429 ஆக உயர்ந்தது.
* புதிதாக 488 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,502 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 63,842 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,25,857 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 90.62% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.50% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.88% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,58,116 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 10,44,20,894 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Tags : Corona , India, corona, healed, rate
× RELATED தொட்டபெட்டாவில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு