×

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்வு!!

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,37,62,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,21,56,968 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 64 ஆயிரத்து 191 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1,04,41,723 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78 ஆயிரத்து 877 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 89,59,933, உயிரிழப்பு - 2,31,028, குணமடைந்தோர் - 58,22,334
இந்தியா       -    பாதிப்பு - 79,45,588, உயிரிழப்பு -  1,19,535, குணமடைந்தோர் - 71,98,715
பிரேசில்       -    பாதிப்பு - 54,11,550, உயிரிழப்பு - 1,57,451, குணமடைந்தோர் -  48,65,930
ரஷியா        -    பாதிப்பு - 15,31,224, உயிரிழப்பு -   26,269, குணமடைந்தோர்  - 11,46,096
பிரான்ஸ்     -     பாதிப்பு -  11,65,278, உயிரிழப்பு -   35,018, குணமடைந்தோர்  - 1,11,347

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -11,56,498
அர்ஜென்டினா - 11,02,301
கொலம்பியா - 10,25,052
இங்கிலாந்து - 8,95,690
மெக்சிகோ - 8,91,160
பெரு - 8,90,574
தென்னாப்பிரிக்கா - 7,16,759
ஈரான்- 5,74,856
இத்தாலி - 5,42,789
சிலி- 5,03,598

Tags : World, corona, healed, number, rise
× RELATED ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய...