×

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை மஞ்சள் பறிமுதல் :மரைன் போலீசார் அதிரடி

ராமேஸ்வரம், :பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 1,000 கிலோ சமையல் மஞ்சளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சளை கடத்த முயல்வதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ேநற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மரைன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்ற நாட்டுப்படகு ஒன்றை சோதனையிட்டனர். அதில் 40 மூட்டைகளில் 1,000 கிலோ மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மஞ்சள் மூட்டைகள் மற்றும் படகை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே படகின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : police action ,Sri Lanka ,Marine , Sri Lanka, bundle yellow, confiscated
× RELATED அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனையும் அவலம்