×

2 சிறுமிகள் மீட்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 16 வயது சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி என்பதும், தாயிடம் கோபித்துக்கொண்டு சென்னை வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, பெற்றோரை சென்னை வரவழைத்து சிறுமியை ஒப்படைத்தனர். இதேபோல், வீட்டை விட்டு வெளியேறி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : 2 little girls rescued
× RELATED கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது