×

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மனித கழிவுகளை மனிதனே அள்ளும்போது நிகழும் உயிரிழப்புகளில் 2013-2018 வரை முதலிடம் பிடித்த தமிழகம், மீண்டும் 2020ல் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம். 1993-லேயே தடை விதிக்கப்பட்டும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை அதிமுக அரசு தொடர்ந்து அனுமதிப்பதற்கு கண்டனங்கள். மனிதமற்ற இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : government ,MK Stalin ,Tamil Nadu , Human cruelty to human waste: MK Stalin's condemnation of the Tamil Nadu government
× RELATED உதயநிதி கைது கண்டித்து மறியல்