×

ரூ.14 லட்சம் கரன்சி பறிமுதல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் துபாய் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த சையத் அலி (26) மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. பின்பு அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அவரது உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.14 லட்சம். இதையடுத்து சையத் அலி பயணத்தை ரத்து செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : 14 lakh currency confiscated
× RELATED சென்னை மண்ணடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்