×

நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதிகளில் ஹூக்கா பார் நடத்திய 14 பேர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் காலேஜ் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, சட்ட விரோதமாக ஹூக்கா பார் நடத்தியது தெரிந்தது. இதுதொடர்பாக, மணிப்பூரை சேர்ந்த ஆன்பம் (45) கைது செய்தனர்.
இதேபோல், நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் காபே என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்திய அரக்கோணத்தை சேர்ந்த கரி முல்லா (34), வில்லிவாக்கத்தை சேர்ந்த லியோ (29) மற்றும் நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம்  நெடுஞ்சாலையில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் ஹூக்கா பார் நடத்திய மாதவரத்தை சேர்ந்த கமலசேகரன் (37), வியாசர்பாடியை சேர்ந்த கண்ணன் (29), நுங்கம்பாக்கம் திருமூார்த்தி நகரில் காபே பெயரில் ஹூக்கா பார் நடத்திய தஞ்சாவூரை சேர்ந்த வீரகுமார் (22), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கபாங்சூயி (28), பியூஸ் (38), நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் ஹூக்கா பார் நடத்திய நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (32), வியாசர்பாடியை சேர்ந்த பார்த்திபன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் ஹூக்கா பார் நடத்திய வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த முகேஷ் (29), மான்வர் அன்சாரி (19) மற்றும் ஆயிரம் விளக்கு வேலஸ் கார்டன் 2வது தெருவில் கபே பெயரில் ஹூக்கா பார் நடத்தய கடலூரை சேர்ந்த திவான் (27), மனோ (27) என மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்து, போதை பொருட்கள், உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

Tags : hookah bar ,areas ,Nungambakkam , 14 arrested for running hookah bar in Nungambakkam, Thousand Lights areas
× RELATED தாந்தோணிமலை பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது